துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
துபாயில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் இரண்டு இந்தியர்களை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாடர்ன் பேக்கரி
இந்திய மாநிலம் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் அஷ்டபு பிரேம்சாகர் (35). இவர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி என்ற கடையில் பணியாற்றி வந்தார்.
இவருடன் இந்தியாவைச் சேர்ந்த சீனிவாஸ், சாகர் ஆகியோரும், பாகிஸ்தானைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் குறித்த பாகிஸ்தான் நபருக்கும், இந்தியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பாகிஸ்தானியர் வாளால் மூன்று இந்தியர்களையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இருவர் உயிரிழப்பு
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஷ்டபு பிரேம்சாகர் மற்றும் சீனிவாஸ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சாகர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அஷ்டபு பிரேம்சாகர், சீனிவாஸ் ஆகியோரின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனையடுத்து கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |