49 வயதில் 3வது திருமணம்.. தன்னை விட 31 வயது இளைய பெண்ணை மணந்த பிரபலம்.. வைரல் புகைப்படம்
பாகிஸ்தானில் அரசியல் பிரபலம் ஒருவர் தன்னை விட 31 வயது குறைவான பெண்ணை 3வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தானின் பிரபல கட்சியின் தலைவராக இருப்பவர் ஆமிர் லியாகத்(49). இவருக்கு ஏற்கனவே திருமண ஆன நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை 2வது மனைவியையும் விவாகரத்து பெற்றதாக ஆமிர் லியாகத் அறிவித்தார். இதையடுத்து உடனடியாக, லியாகத் 18 வயதான சியாடா டேனியா ஷா என்கின்ற பெண்ணை அன்றைய தினமே திருமணம் செய்து கொண்டார்.
இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ள லியாகத் எங்களுக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நான் இருண்ட சுரங்கப்பாதையை கடந்து வந்துள்ளேன். அது தவறான திருப்பம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆமிர் லியாகத் திருமணம் செய்து கொண்ட பெண் கூறியதாவது, எனக்கு அவரை சிறு வயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். நான் அழும்போதெல்லாம் என்னுடைய பெற்றோர், டிவியில் அவரது படத்தை காண்பிப்பார்கள் என்று கூறியுள்ளார்.