இந்த நாட்டில் கொரோனா 5வது அலை உருவாகலாம்! சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் அங்கு கொரோனா 5வது அலை வருவதற்கான அபாயம் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக மெதுவாக நடைபெறுவதால் பாகிஸ்தானில் கொரோனா ஐந்தாவது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஓரளவுக்கு தான் எட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் இன்னமும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் தான் உள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை மூத்த தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்காவிட்டால் நாட்டில் கொரோனா ஐந்தாவது அலை எழக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுவரை நாட்டில் 26 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியை முற்றிலும் செலுத்திக் கொண்டுள்ளனர். 20 சதவீதம் பேர் முதல் தவணையை மட்டும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.