இந்தியாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவிப்பு
சனிக்கிழமை அதிகாலை முதல் இந்தியா மீது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
விமானப்படை தளங்கள் மீது
வட இந்தியாவில் ஏவுகணை சேமிப்பு தளம் உட்பட பல தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையை தற்போது நீட்டித்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே பாகிஸ்தானின் தாக்குதல் தொடங்கியது, ஆனால் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு இந்திய ஏவுகணைகளை இடைமறித்தது என்றே கூறப்படுகிறது.
காஷ்மீர் தொடர்பான நீண்டகால சர்ச்சையில் சிக்கியுள்ள இரு நாடுகளும், புதன்கிழமை முதல் பாகிஸ்தானுக்குள் இந்தியா தீவிரவாத தளங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தாக்குதல் நடத்தியதிலிருந்து தினசரி மோதல்களில் ஈடுபட்டுள்ளன.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி
பாகிஸ்தான் தரப்பும் பதிலடி அளித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் இந்திய காஷ்மீரில் உள்ள உதம்பூர் விமானப்படை தளமும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்தியாவின் BrahMos ஏவுகணை சேமிப்பு தளம் மீதும் பாகிஸ்தான் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் இந்திய இராணுவம் மிக விரைவில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா முன்னெடுத்த அதிரடி தாக்குதல் நடவடிக்கை இந்தியா சிந்தூர் என பெயர் சூட்டிய நிலையில், எதிர் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ”ஆபரேஷன் பன்யானுன் மர்சூஸ்” என பெயரிட்டுள்ளது.
பழிவாங்கும் விதமாக
இந்த வார்த்தை குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டது, அதாவது உறுதியான, ஒன்றுபட்ட அமைப்பு என்பது இதன் பொருள். இதனிடையே, இந்தியாவின் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அங்கு சைரன்கள் ஒலித்ததாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நேரில் பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா தனது விமானங்கள் மூலம், வான்வழி ஏவுகணைகளை ஏவியது... நூர் கான் தளம், முரீத் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
விமானப்படை தளங்களில் ஒன்று தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வெளியே உள்ள ராவல்பிண்டியின் காரிஸன் நகரத்தில் உள்ளது, மற்ற இரண்டும் இந்தியாவின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் கிழக்கு மாகாணமான பஞ்சாபில் உள்ளன.
கடந்த மாதம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு தொடக்கமாக புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இதனிடையே, இரு நாடுகளும் முன்னெடுத்துள்ள தாக்குதல்களில், புதன்கிழமை முதல் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் அவை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |