ஐபிஎல் தொடரில் இணைய உள்ள பாகிஸ்தான் வீரர்?
ஐபிஎல் தொடரில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் முகமது அமீர்?
உலகளவில் பிரபலமான ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. உலகின் பிரபல கிரிக்கெட் வீரர்களும் இதில் பதிவு செய்து விளையாடி வருகின்றனர்.

அதேவேளையில், 2008 ஐபிஎல் தொடரில் மட்டும் அக்தர், அப்ரிடி, யூனுஸ் கான் உள்ளிட்ட பல்வேறு பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் ஐபிஎல் தொடரில் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009 முதல் 2024 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய பந்து வீச்சாளரான முகமது அமீர், 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்களும், 61போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்களும் கைப்பற்றியுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் சிக்கி, 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற வழக்கறிஞர் வர்ஜிஸ் அமீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது.

இதன் மூலம், அமீரும் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்றுவிட்டார்.
இதன் மூலம், பாகிஸ்தானியராக அல்லாமல் பிரித்தானிய குடிமகனாக அடுத்த ஐபிஎல் ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பிரித்தானிய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் அசார் மஹ்மூத், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், பின்னர் 2015 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |