இந்திய அணியின் ஜெர்சியில் “பாகிஸ்தான்” பெயர்! BCCI எதிர்ப்பு: PCB கண்டனம்
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஜெர்சி விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய சர்ச்சையில் கிளம்பியுள்ளது.
அதாவது, இந்திய அணி ஜெர்சியில் "பாகிஸ்தான்" என்ற பெயரை சேர்க்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல மறுத்ததையடுத்து, இந்தியாவுடன் தொடர்புடைய போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் வகையில் போட்டிகள் ஹைப்ரிட் மாதிரிக்கு மாற்றப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த ஏற்பாட்டை பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் "பாகிஸ்தான்" என்ற பெயரை சேர்க்கக் கூடாது என பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விளையாட்டில் அரசியல்
இதையடுத்து பெயர் வெளியிட விரும்பாத மூத்த பிசிபி அதிகாரி, செய்தி நிறுவனமான IANS-யிடம் பேசுகையில், பிசிசிஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கலந்து வருவதாக குற்றம் சாட்டினார்.
போட்டியில் கலந்து கொள்ள அவர்கள் பாகிஸ்தான் வர மறுத்தனர். அத்துடன் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய அணியின் கேப்டனை அனுப்ப மறுத்தனர், , இப்போது போட்டியின் தொகுப்பாளர் நாட்டின் (பாகிஸ்தான்) பெயர் அவர்களின் ஜெர்சியில் இருக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐசிசி இந்த நடவடிக்கையை ஆதரிக்காது மற்றும் பாகிஸ்தானை ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |