பாகிஸ்தான் கடற்படையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள்
சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் கடற்படையின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் பாகிஸ்தான் கடற்படையின் பலம்
சீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இணைக்கப்பட்டு அடுத்த வருடம் முதல் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில் பாகிஸ்தான் கடற்படையின் பலம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னேற்றம் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் பில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏற்பட்டுள்ளது.

விரிவான ஒப்பந்தத்தை அடுத்து, பாகிஸ்தான் ராணுவத்திடம் 8 ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை தனது கடற்படையில் பெற்றுள்ளது.
ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் 2028 ம் ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து பெறப்படும் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் வடக்கு அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் என்று பாகிஸ்தான் கடற்படையின் தலைவர் அட்மிரல் நவீத் அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வடிவமைக்கப்பட்ட இந்த நீர்முழ்கிக் கப்பல்கள் சுமார் $5 பில்லியன் டொலர்கள் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவின் யாங்சே நதியில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |