டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: முன்னாள் வீரர் கருத்தால் பரபரப்பு
டி20 தொடரில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் அணியும் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் வலியுறுத்தியுள்ளார்.
டி20 தொடரில் இருந்து வங்கதேசம் விலகல்
2026 ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக் காட்டி வங்கதேச கிரிக்கெட் அணியின் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் நடத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
ஆனால் வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை இந்தியா முற்றிலுமாக நிராகரித்தது, இது வங்கதேச கிரிக்கெட் அணிக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்
இந்நிலையில் வங்கதேச அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் வலியுறுத்தியுள்ளார்.
Caught behind Show என்ற யூடியூப் சேனலில் பேசிய ரஷீத் லத்தீப், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், தற்போதுள்ள கிரிக்கெட் வாரியத்தின் அதிகார மையத்திற்கு எதிராக சவால் விட இது சரியான தருணம், இந்தியா பாகிஸ்தான் அணியின் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் தொடரின் 50% சுவாரஸ்யம் குறைந்துவிடும்.

எனவே இந்த நேரத்தில் வங்கதேச அணிக்கு துணையாக நின்று பாகிஸ்தான் அணி இந்த தொடரில் பங்கேற்பதை மறுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
அதே சமயம் தொடரை புறக்கணிப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய அபராதமும், தடையும் விதிக்கப்படலாம் என்றும் ரஷீத் லத்தீப் ஒப்புக் கொண்டுள்ளார்.
இருப்பினும் இது தேவை என்றும், பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால் அது உலக கோப்பை தொடரை முடக்குவதற்கு சமம் என்று அவர் வாதிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |