ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?
உலகில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், தற்போது 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு முன்பு பரவிய டெல்டாவை விட இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், ஒமைக்ரான் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸால் பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் அவர்கள் யார் என்ற விபரம் வெளியாகவில்லை, பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு ஒரேநாளில் மட்டும் புதிதாக 515 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,927-ஐ தொட்டுள்ளது.
மேலும், தற்போது 633 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.