அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை - ஈரானுக்காக 6 பாதைகளை திறந்த பாகிஸ்தான்
அமெரிக்கா ஹார்முஸை முற்றுகையிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஈரானுக்கு 6 தரைவழி பாதைகளை திறந்துள்ளது.
அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஹார்முஸ் நீரிணையை வழியே கப்பல்கள் வெளியே செல்லாதவாறு அமெரிக்கா கடற்படை முடக்கியுள்ளது.

இந்த முடக்கம்,ஈரானின் வர்த்தகப் போக்குவரத்தை கணிசமாகச் சீர்குலைத்து, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதையும் உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலையும் தடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் உள்ள முற்றுகையை நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவின் இந்த தடையை, இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் சட்டபூர்வ வழியில் உடைத்துள்ளது.
6 பாதைகளை திறந்த பாகிஸ்தான்
இந்த முடக்கம் காரணமாக ஈரானுக்குள் செல்ல முடியாமல், கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானின் துறைமுகங்களில் 3000க்கும் மேற்பட்ட கொள்கலங்கள் முடங்கி இருந்தன.

தற்போது இதில் உள்ள சரக்குகளை சாலை வழியாக ஈரானுக்குள் கொண்டு செல்வதற்கான 6 பாதைகளை பாகிஸ்தான் திறந்துள்ளது. பாகிஸ்தான் ஈரானுடன் 900 கி.மீ.க்கும் அதிகமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
சர்வதேச சாலைப் போக்குவரத்து தொடர்பாக பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் பொருட்களை பாகிஸ்தான் வழியாக ஈரானுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கிறது.
பாகிஸ்தானின் தரைவழிப் பாதைகள், நெருக்கடியான சூழலில் ஈரானின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான மாற்றாக உருவெடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |