ஆசிய கிரிக்கெட் கோப்பை: இந்திய அணிக்கு எதிராக சாதனை படைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தமாக 266 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணியின் பேட்டிங்கின் போதே மழை அவ்வபோது குறுக்கீட்டு வந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக இந்திய அணி பேட்டிங்கை நிறைவு செய்யும் போதே மழை தீவிரமாக குறுக்கிட்டது.
ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டம் முடிவு இல்லாமல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சாதனை
இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டது, பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை நடைபெற்ற எந்தவொரு ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணி வீழ்த்தி ஆல்-அவுட் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |