பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல் - 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்த அமைப்பு
பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயிலை BLA என்ற பிரிவினைவாத அமைப்பு கடத்தியுள்ளது.
ரயில் கடத்தல்
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து சுமார் 400 பயணிகளுடன் ஜாஃபர் விரைவு ரயில், கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்று பலூச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு, ரயில் தண்டவாளத்தை தகர்த்து, ரயிலை நிறுத்தி அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
6 பேர் உயிரிழப்பு
சம்பவம் நடந்த இடத்திற்கு, பாகிஸ்தான் அரசு உடனடியாக மீட்டுப்படையினரை அனுப்பியுள்ளது.
ரயிலில் பயணிகளுடன், நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் உள்ள நிலையில், அதில் 6 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக BLA அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், ரயிலில் பிணைக்கைதிகளாக உள்ள அனைவரும் கொல்லப்படுவார்கள் என BLA எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |