சீன அதிபரை கிண்டலடித்த பாகிஸ்தான் அமைச்சர்! ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்தது கமெராவில் சிக்கியது.
பாகிஸ்தான் மாணவர் ஒருவர், சீனாவின் பயணத் தடை குறித்து பே, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி,யை அணுகியபோது, அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்தது கேமராவில் சிக்கியது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
மலேசியாவில் இருந்து வரும் நபர்கள் சீனாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் ஏன் பாகிஸ்தானியர்கள் "சீனாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை" என்று ஒரு பாகிஸ்தான் மாணவர் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த குரேஷி, ஜி ஜின்பிங் கூட எங்கும் செல்வதில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 24 மாதங்களில் ஜி ஜின்பிங் சீனாவை விட்டு வெளியேறவில்லை.
Chinese President Xi Jinping is scared, hiding; don't even meet us. Every thing is closed: Pakistan FM Qureshi to students on China travel ban due to #COVID19 pic.twitter.com/gZHsFsgMBJ
— TEAM BHARAT (@TeamBharat_) January 19, 2022
பாகிஸ்தானும் சீனாவும் ஒரு நல்லுறவைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் 2020-ல் கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, பாகிஸ்தானிய குடிமக்கள் சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சீனப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள 28,000 பாகிஸ்தான் மாணவர்கள், பணியிடத்தில் பயிற்சி இல்லாமல் பெறப்பட்ட வெளிநாட்டு மருத்துவத் தகுதிகள் பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களை கோபப்படுத்துகிறது.