அணு ஆயுத சோதனை நடத்தபட்டதா? டிரம்ப்பின் கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம்
பல நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக டிரம்ப் கூறிய நிலையில், பாகிஸ்தான் அதற்கு விளக்கமளித்துள்ளது.
பாகிஸ்தான் விளக்கம்
33 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா போர் துறைக்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அணு ஆயுத சோதனை தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில், "எங்களை தவிர அனைத்து நாடுகளும் அணு ஆயுத சோதனை நடத்துவதால் நாங்களும் நடத்த வேண்டியுள்ளது.
ரஷ்யா, சீனா, வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ரகசியமாக அணு ஆயுத நடத்துகின்றன. ஆனால் அந்த நாடுகள் இது குறித்து பேசுவதில்லை. நாங்கள் வெளிப்படையாக கூறிவிட்டோம்" என பேசினார்.
பாகிஸ்தான் விளக்கம்
டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் மூத்த பாதுகாப்பு அதிகாரி, "பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனை நடத்திய நாடு இல்லை. அதே போல், மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் முதல் நாடாகவும் இருக்காது.

முழுமையான அணுஆயுத சோதனைத் தடை உடன்பாட்டில் (CTBT) கையெழுத்திடாவிட்டாலும், பாகிஸ்தான் அணு அதன் நோக்கங்களை மதித்து, அணு ஆயுத சோதனை தடையை கடைப்பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடைசியாக 1998 ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியது.
முன்னதாக சீனாவும், டிரம்ப்பின் இந்த அணுஆயுத சோதனை குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |