இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் அணி மறுப்பு: முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி வருத்தம்
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்களில் விளையாட போவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிப்பு
டி20 உலகக் கோப்பை 2026 இந்தியா மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்து இருப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஷாஹித் அப்ரிடி கருத்து
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அரசியல் கதவு மூடப்படும் போது கிரிக்கெட் கதவு திறக்கும் என்று நான் எப்போதும் நம்புவேன். உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருத்தத்திற்கு உரியது. ஆனால் தற்போது என்னுடைய அரசின் பின்னால் நான் நிற்கிறேன்.
இது ஐசிசி-க்கு அறிக்கை மூலம் அல்லாமல், ஒவ்வொரு அமைப்பும் சுதந்திரமான மற்றும் நியாயமான முடிவுகள் எடுக்கும் நிலை என்று அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |