அமீரகத்திற்கு செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடன்: பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 3.5 பில்லியன் டொலர் கடனையும் அடைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
450 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்
பாகிஸ்தான் 1996-97 காலக்கட்டத்தில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அரபு அமீரகத்திடம் கடனாக பெற்றது.

ஓராண்டு காலக் கடனான இந்த தொகையை மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் முழுமையாக அடைக்க உள்ளது.
தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும் ஏப்ரல் மாதத்திற்குள் அடைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக, மூத்த அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நிலுவையில் உள்ள தொகையின் ஒரு பகுதியை முதலீடாக மாற்றிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இணையாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வங்கியின் வசம் 16.4 பில்லியன்
இதனைத் தொடர்ந்து, கடனை திருப்பி செலுத்தும் கால அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 11ஆம் திகதி அன்று 450 மில்லியன் டொலரும், ஏப்ரல் 17ஆம் திகதி 2 பில்லியன் டொலரும், ஏப்ரல் 23ஆம் திகதி 1 பில்லியன் டொலரும் திருப்பி செலுத்தப்பட உள்ளன.
மத்திய வங்கியின் வசம் உள்ள 16.4 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து இந்தக் கடனுக்கான நிதியை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |