பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை
இந்தியாவிற்குள் பாயும் பிரம்மபுத்திரா நதியை நிறுத்த வேண்டும் என சீனாவிற்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க, இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
இந்த செயலால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. ஏனெனில், பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமே சிந்து நதியை நம்பித்தான் உள்ளது. இதனால் அங்கு சில மாதங்கள் கழித்து விவசாயம் பாதிக்கும்.
வெள்ளம் மற்றும் வறட்சியை பாகிஸ்தானால் கணிப்பது கடினம். இதன் காரணமாக, பாகிஸ்தானின் பிலாவில் பூட்டோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பிரம்மபுத்திரா நதி
இந்நிலையில், இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கே பாயும் பிரம்மபுத்திரா நதியை நிறுத்துமாறு சீனாவிற்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒருவேளை சீனா பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் அது பயங்கரவாதமாக பார்க்கப்படாது. ஏனெனில், சிந்து நதி நீர் ஒப்பந்தம்போல் இந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையே அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இல்லை.
எனவே, சீனா அதன் எரிசக்தி திட்டங்கள் அல்லது புவிசார் அரசியல் செல்வாக்கிற்கான விருப்பத்தின் காரணமாகவே அது இருக்கும் என்பதால், பாகிஸ்தானின் கோரிக்கை சீனா ஏற்க வாய்ப்பில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |