ஸ்டம்பை பேட்டால் தட்டிய பாகிஸ்தான் வீரர்: அவுட் கேட்ட எதிரணிக்கு கிடைத்த ஏமாற்றம்..என்ன காரணம்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் பேட்டால் ஸ்டம்பை தட்டியது கேள்விகளை எழுப்பியது.
மொஹம்மது ரிஸ்வான்
ராவல்பிண்டியில் நடந்த டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்தது.
Out or Not Out 🤔
— Richard Kettleborough (@RichKettle07) October 24, 2025
- Mohammad Rizwan 🇵🇰 did something unbelievable 🙄pic.twitter.com/HOAcXg1xqz
இப்போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மொஹம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan), ஆட்டநேர முடிவின் கடைசி பந்தை எதிர்கொண்ட பின் வேண்டுமென்றே ஸ்டம்பை பேட்டால் தட்டியதால் பெய்ல்ஸ் கீழே விழுந்தன.
அதன் பின்னர் அவர் இயல்பாக நகர விக்கெட் கீப்பர் வெர்ரெய்ன் உடனடியாக ஹிட் விக்கெட் என மேல்முறையீடு செய்தார்.
அப்போது பந்துவீச்சு முனையில் இருந்த நடுவர் Sharfuddoula உடனடியாக ஒரு புன்னைகையுடன் மேல்முறையீடுகளை கை அசைத்தார். மேலும் Spuare-leg நடுவர் கிறிஸ் பிரவுன் அவரை ஆதரித்தார்.
அவுட் இல்லை
அதாவது ரிஸ்வான் ஆட்டமிழக்கவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான காரணத்தை தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு நேரடியாக விளக்கவில்லை.
வழக்கமாக ஸ்டம்புகளில் பெயில்களை எடுப்பது நடுவர்கள்தான். 
ஸ்ட்ரைக்கர் அல்லாதவரின் முனையில் உள்ள பெயில்கள் நடுவரின் அருகில் இருப்பதால் முதலில் அகற்றப்படும். சில சமயங்களில் துடுப்பாட்ட வீரர்கள் பெயில்களை கழற்றுவார்கள்.
பொதுவாக தங்கள் கைகளால்தான் அதனை செய்வார்கள். ஆனால் ரிஸ்வான் பேட்டினால் பெயில்களை தட்டிவிட்டது ஆட்டத்தின் விதிப்படி குற்றமல்ல.
விதி 35.1
ஏனெனில், விதி 35.1 ஒரு துடுப்பாட்ட பந்துவீச்சாளர் தனது பந்துவீச்சு ஸ்ட்ரைடை அடைந்த பின்னரே அவுட் ஹிட் விக்கெட்டாகக் கருதப்பட முடியும் என்று கூறுகிறது.
ஒரு பந்துவீச்சைப் பெறுவதற்கு அல்லது பெறுவதற்குத் தயாராகும்போது அவர் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் பெயில்கள் விழ காரணமாவது
- ஆடிய உடனேயே முதல் ரன் எடுக்கும்போது அல்லது பந்தை விளையாடும்போது பெயில்கள் விழ காரணமாவது
- பந்தை விளையாட எந்த முயற்சியும் எடுக்கப்படாவிட்டால், முதல் ரன் எடுக்கும்போது பெயில்கள் விழ காரணமாவது
- சட்டப்படி அவர்களின் விக்கெட்டைப் பாதுகாக்க இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரோக்கை செய்யும்போது பெயில்கள் விழ காரணமாவது
இதுபோன்ற காரணங்களுக்காக மட்டுமே ஹிட் விக்கெட் அவுட் கொடுக்கப்படும். ரிஸ்வானின் செயல்களால் அந்த அளவுகோல்கள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |