காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலும் எங்களுக்கும் தொடர்பில்லை: புரட்சிதான் காரணம்..பாகிஸ்தான் விளக்கம்
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவை உலுக்கிய தாக்குதல்
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இச்சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளதைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு TRF என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர்
இதுதொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை. எனவே இதற்கு பாகிஸ்தானை குறை கூற வேண்டாம்.
இது அனைத்தும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் புரட்சிகள் உள்ளன. நாகாலாந்து முதல் காஷ்மீர் வரையும், தெற்கில் சத்தீஸ்கர், மணிப்பூர் என எல்லா இடங்களிலும் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் உள்ளன" என்றார்.
மேலும் அவர், "இந்துத்துவ சக்திகள் மக்களை சுரண்டுகின்றன, சிறுபான்மையினரை அடங்குகின்றன. கிருத்துவர்களையும், பவுத்தவர்களையும் சுரண்டுகின்றன. அவர்கள் கொள்ளப்படுகிறார்கள். இது அதற்கு எதிரான புரட்சி. இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |