பாகிஸ்தானில் இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை: 18 குழந்தைகள், ஒரு ஆசிரியர் உயிரிழப்பு
Pakistan school collapsed: 10 children killed: பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த எதிர்பாராத விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
விபத்தின் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் முகமது அசிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பெரும்பாலானோர் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும், ஒரு ஆசிரியர் ஒருவரின் உடலும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.