அடிப்படை தேவையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு! பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்துகளே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வேலையின்மை, அதிக விலைக்கு விற்கப்படும் எரிபொருள் போன்ற பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர்.
நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவோ அல்லது உள்நாட்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவோ இயலாத நிலை உள்ளது.
மருந்து தட்டுப்பாடு
மருத்துவமனையில் நோயாளிக்குச் சரியான மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அதிகப்படியான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் மருத்துவத் துறை கூறுவதாவது, இன்னும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான மருந்துகள் தான் கையிருப்பு இருக்கிறது எனக் கூறியுள்ளது.
வங்கி அமைப்பில் டாலர்கள் தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்களுக்கு, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
@WION
அண்மையில், பாகிஸ்தான் மருத்துவ சங்கம் (பிஎம்ஏ) நிலைமை பேரழிவாக மாறுவதைத் தடுக்க அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரியது.
இருப்பினும், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காமல், பற்றாக்குறையின் அளவை மதிப்பிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.