128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை
2028 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், நடைபெற உள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
128 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

T20 வடிவத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டும் இடம் பெரும் 28 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அணிக்கு வாய்ப்பு?
இதில், ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் சிறந்த ஒரு அணிக்கு மட்டுமே தகுதி வழங்கப்படும்.
இதன்படி, ஆசியாவில் இருந்து இந்தியாவும், ஐரோப்பியாவில் இருந்து இங்கிலாந்தும், ஓசியானியாவில் இருந்து அவுஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவிலிருந்து தென்னாப்பிரிக்காவும், அமெரிக்க கண்டத்தில் இருந்து மேற்கு இந்திய தீவுகள் அணியும் பங்குபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்கா தகுதி பெறும் என கூறப்படுகிறது.

இதனால், பாகிஸ்தான்,இலங்கை போன்ற அணிகளுக்கு ஒலிம்பிக் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக உள்ளது.
போட்டி எப்போது?
ஒலிம்பிக் கிரிக்கெட், ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி, ஜூலை 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு 2 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி முதல் போட்டி காலை 9:00 மணிக்கும் (இந்தியா நேரப்படி இரவு 9:30) 2வது போட்டி மாலை 6:30 மணிக்கும் (இந்தியா நேரப்படி மறுநாள் காலை 7:00) தொடங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |