பாகிஸ்தானில் சுய அழிப்பு படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: 5 காவலர்கள் உட்பட 14 பேர் பலி
பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கோர தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதல் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 5 காவல்துறை அதிகாரிகள் வரை உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கபல்(Kabal) பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்ட கூட்டத்தை குறித்து இந்த மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை கைபர் பக்துன்க்வா அவசரகால சேவையின் செய்தி தொடர்பாளர் பிலால் பைசி உறுதிப்படுத்தியுள்ளார்.
🚨 Pakistan: A suicide bomber has exploded near a police station in Kabal, Swat valley of Khyber Pakhtunkhwa province. There was large public rally, ‘Aman Pasoon’ in the area when the bombing took place. Multiple casualties have been reported. https://t.co/QXIMj7czin
— Asia Front (@asiafront0) August 2, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |