PAK vs SL: இலங்கை செல்கிறது பாகிஸ்தான் டெஸ்ட் அணி!
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக மென் இன் கிரீன் அணி இன்று (ஜூலை 6) அதிகாலையில் இலங்கைக்கு செல்கிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் இலங்கைச் சுற்றுப்பயணம் மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து ஜூலை 16-20 மற்றும் 24-28 ஆகிய தேதிகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
முதல் ஆட்டம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை தலைநகர் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ்.. மீண்டும் அணியுடன் இணைவார் என அறிவிப்பு
2021-23 ஐசிசி ஆடவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் கீழ் இரு அணிகளும் மோதுகின்றன. முன்னதாக கடந்த திங்களன்று, பாகிஸ்தான் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான பாபர் அசாம், வரவிருக்கும் தொடரின் நிலைமைகள் வித்தியாசமாகவும் கடினமாகவும் இருக்கும் என்று கூறினார், அணி சவாலுக்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.
அவர் தனது அணியின் வேகப்பந்து இலங்கை வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என முழு நம்புவதாக தெரிவித்தார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளருக்கு கோவிட்-19 தொற்று., 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்
சமீபத்திய டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள், நான்கு மிடில் ஆர்டர் பேட்டர்கள், மூன்று ஆல்-ரவுண்டர்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சல்மான் அலி ஆகா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஜாம்பவானின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா!
பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷபீக், அசார் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாத் ஆலம், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், முகமது நவாஸ், நசீம் ஷா, நௌமன் அலி, சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், ஷஹீன் அப்ரிடி, ஷான் மசூத் மற்றும் யாசிர் ஷா