ஒரே வாரத்தில் 2 ஏவுகணை சோதனை - பாகிஸ்தானின் புதிய Fatah-2 ER
Pakistan Tests Hypersonic Fatah-2 ER Missile: பாகிஸ்தான், ஒரு வாரத்திற்குள் இரண்டு முக்கியமான ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
Fatah-4 கிரூஸ், Fatah-2 ER
கடந்த வாரம் Fatah-4 கிரூஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு சோதிக்கப்பட்ட நிலையில், இவ்வாரத்தில் Fatah-2 ER எனப்படும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடைபெற்றது.

பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, Fatah-2 ER ஏவுகணை நீண்ட தூர இலக்குகளை மிகுந்த துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டது.
மேலும், எதிரியின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் வகையில் தனித்துவமான இயக்கவியல் மற்றும் மேம்பட்ட வழிகாட்டி அமைப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்
இந்த சோதனையை பாகிஸ்தான் ரொக்கெட் படை தளபதி, மூத்த இராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டனர்.
அதேபோல், பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி அசிம் முனீர் உள்ளிட்ட தலைவர்கள் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கடந்த வாரம் சோதிக்கப்பட்ட Fatah-4 கிரூஸ் ஏவுகணையும் மேம்பட்ட வழிகாட்டி அமைப்புகளுடன் நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் சோதனைகள், பாகிஸ்தான் தனது ஏவுகணை திறன்களை அதிகரித்து, நீண்ட தூர தாக்குதல் மற்றும் துல்லியமான இலக்கு அடைவதில் கவனம் செலுத்துவதை வெளிப்படுத்துகின்றன.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைக்கு புதிய சவால்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |