4 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நேட்டோ? பாகிஸ்தான் வெளியிட்ட தகவல்
பாகிஸ்தான் மற்றும் சவூதி இடையான ஒப்பந்ததில் மேலும் இரு நாடுகள் இணைய வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நேட்டோ?
கடந்த ஆண்டில் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும் என்று உறுதியளித்திருந்தது.
தற்போது, இந்த ஒப்பந்தத்தின் கீழ் கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைவது சமீப காலங்களில் முன்வைக்கப்பட்டு வரும் இஸ்லாமிய நேட்டோ என்ற கருத்தாக்கம் உருவாவதை உணர்த்துகின்றன.
இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முஹம்மது ஆசிஃப், "இந்த ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் இந்த நாடுகளும் சேர்க்கப்படலாம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் பல்வேறு கட்டங்களில் உள்ளது.

கத்தார் மற்றும் துருக்கியும் இணைந்தால், நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு நமது பிராந்தியத்திற்கும் வருவது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சார்புநிலை குறைக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் சொந்தப் பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்காகவே, யாருக்கும் எதிரானது அல்ல" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |