சீனாவின் ஒத்துழைப்பில் முதல் முறையாக விண்வெளிக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்
muhammad zeeshan ali is first pakistan astronaut to space: நாளை சீனாவிலிருந்து ஏவப்படும் ஷென்சோ-24 என்ற விண்கலத்தில் செல்லும் முகமது ஜீஷான் அலி, விண்வெளிக்கு செல்லும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையை பெறுகிறார்.
முதல் முறையாக விண்வெளிக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்
வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து நவம்பர் 25 ஆம் திகதி காலை லாங் மார்ச்-2F என்ற ராக்கெட் மூலம், ஷென்சோ-24 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது.

இதில், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் 2 சீனர்கள் என 3 விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு, தியாங்காங் விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சி மற்றும் சோதனை திட்டங்களில் ஈடுபட உள்ளனர்.
இதில், பாகிஸ்தானிலிருந்து செல்லும் முகமது ஜீஷான் அலி, விண்வெளிக்கு செல்லும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையை பெறுகிறார்.
மேலும், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை அலி பெறவிருக்கிறார்.

2025 பிப்ரவரியில், சுபார்கோவும் சீன மனித விண்வெளி நிறுவனமும் 2 பாகிஸ்தானியர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களில் ஒருவரை தியாங்காங்கிற்கு அனுப்புவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
40 வயதான முன்னாள் விமானப்படை வீரரான முகமது ஜீஷான் அலிக்கு, கடந்த சில மாதங்களாக சீனாவில் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.
Shenzhou-24 astronaut Muhammad Zeeshan Ali introduces himself. https://t.co/vyzU9z6YYP
— CNSPACE (@CNSpaceflight) November 24, 2026
அதில் சக வீரர்களின் விண்வெளி கட்டளைகளை புரிந்து கொள்வதற்காக மாண்டரின் மொழியும் கற்றுத்தரப்பட்டுள்ளது.
தியாங்காங் விண்வெளி நிலையத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளைக் கொண்ட 4 பாகிஸ்தானிய உயிரித் தொழில்நுட்பச் சோதனைகளை மேற்கொண்ட பின்னர், ஒரு வாரம் கழித்து அங்கு ஏற்கனவே தங்கியுள்ள சீனாவை சேர்ந்த இரு விண்வெளி வீரர்களுடன் அவர் பூமிக்கு திரும்புவார்.