கழிப்பறை காகிதத்தை விட மோசமாக... பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை
பாகிஸ்தானை அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களுக்காகப் பயன்படுத்திவிட்டு, கழிப்பறை காகிதத்தை விட மோசமாக புறந்தள்ளியதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தனது ஆதாயத்திற்காக
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இதுவரை கண்டிராத ஒரு வலுவான வாக்குமூலத்தை அளித்துள்ளார், இது உலக அரங்கில் அந்த நாட்டை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்கா பாகிஸ்தானை தனது ஆதாயத்திற்காகப் பயன்படுத்திவிட்டு பின்னர் அதை புறந்தள்ளுவதாக ஆசிஃப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு, ஆசிஃப் ஒரு நேர்காணலின் போது,
பாகிஸ்தான் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து நிதியளித்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், அவை அனைத்தும் மேற்கத்திய நாடுகளுக்காகவே பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளதாகவும் ஆசிஃப் அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆசிஃப், 1999 க்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட பாகிஸ்தான் எடுத்த முடிவு, குறிப்பாக ஆப்கானிஸ்தான் தொடர்பாக, நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்காவுடன் இணைந்து
பாகிஸ்தானை அமெரிக்கா கழிப்பறை காகிதத்தை விட மோசமாக நடத்தியதாகவும் ஆசிஃப் கூறியுள்ளார். மட்டுமின்றி, அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் ஈடுபாடு மதக் கடமையால் உந்தப்பட்டது என்ற பிரபலமான கருத்திலும் அவர் முரண்பட்டார்.

ஜிஹாத் என்ற முழக்கத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் அணிதிரட்டப்பட்டு போராட அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, மறைந்த இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிப் போர்களில் சிக்க வைத்ததாகவும்,
பாகிஸ்தானின் நட்பு நாடுகள் விலகிச் சென்ற பிறகும் அதன் விளைவுகளை பாகிஸ்தான் தனியாக அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது என்பதையும் ஆசிப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |