சவுதிக்கு ராணுவத்தை அனுப்பும் பாகிஸ்தான், துருக்கி: ஹவுதிக்கு எதிராக ஒன்றிணைந்த நாடுகள்
Pakistan Turkey Send Troops to Saudi: சவுதிக்கு ராணுவத்தை அனுப்ப பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகள் முடிவு எடுத்துள்ளது.
3 நாடுகளின் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்
கடந்த ஆகஸ்ட் 7ம் திகதி பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய 3 நாடுகள் இணைந்து மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், உறுப்பு நாடுகள் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்ற உறுப்பு நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சவுதி மீது ஹவுதிகள் தாக்குதல்
ஏமனில் உள்ள பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஏமன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா ஹவுதி படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சவுதியின் புனித தளமான மெக்கா மற்றும் மதீனா மீது ஹவுதிகள் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சவுதி மீதான இந்த ஹவுதிகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சவுதிக்கு ராணுவ படைகளை அனுப்பும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி
இந்நிலையில் அக்டோபர் 5ம் திகதி மெக்கா பாதுகாப்பு கூட்டணி நாடுகளின் வியூக அரசியல் மற்றும் பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.
இந்த உயர்மட்ட கூட்டத்தில் 3 உறுப்பு நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், புதிய பரஸ்பர ஒப்பந்தத்தின் கீழ், சவுதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப பாகிஸ்தானும், துருக்கியும் முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடு கூட்டணி நாடுகளின் தேசிய சட்டங்களுக்கு இணங்க ராணுவ படைகளை நிலை நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூன்று நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, ஹவுதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள துரிதப்படுத்தப்பட்டுள்ளது.