அனல் பறக்கும் டி20 கிரிக்கெட் தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி பாகிஸ்தான் முன்னிலை!
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் வெற்றி
ஜிம்பாப்வேயில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
புலவாயோவில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 165 ஓட்டங்கள் குவித்தது.
Trophy unveiled in Bulawayo ahead of the start of the Pakistan vs Zimbabwe T20I series 🏆#ZIMvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/6vX1RLOU0I
— Pakistan Cricket (@TheRealPCB) December 1, 2024
உஸ்மான் கான்(39), தயப் தாஹிர் (34*)மற்றும் சைம் அயூப்(24) ஆகியோர் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
எங்களுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லை! 233 ஓட்டங்கள் வித்தியாசம்..படுதோல்வி குறித்து பேசிய இலங்கை கேப்டன்
108 ஓட்டங்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே
166 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் 108 ஒட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மருமணி மற்றும் கேப்டன் சிக்கந்தர் ராஜா ஆகியோர் மட்டும் சிறப்பாக விளையாடினர்.
Pakistan complete a comprehensive 57-run win over Zimbabwe in the first T20I 👏
— Pakistan Cricket (@TheRealPCB) December 1, 2024
Bowlers put in a solid display to grab the last 8️⃣ wickets for 3️⃣1️⃣ runs 🎯#ZIMvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/IJ7ajUB0CU
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது மற்றும் ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா 3 மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை திணறடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |