அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்... போருக்கு வெளிப்படையாக எச்சரித்த பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்றும், ஆனால் இஸ்தான்புல்லில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினால் அது நேரிடையான போருக்கு வழி வகுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மீண்டும் வன்முறை
எல்லையில் ஏற்பட்ட பயங்கர மோதல்களைத் தொடர்ந்து இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இஸ்தான்புல்லில் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் பேச்சுவார்த்தை, 2021 ஆம் ஆண்டு காபூலை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து ஏற்பட்ட மிக மோசமான எல்லை மோதல்களுக்குப் பிறகு மீண்டும் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
மட்டுமின்றி இந்தப் பேச்சுவார்த்தைகள் தோஹா போர்நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு அமுல்படுத்துவதற்கான ஒரு திட்டம் வகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதிலிருந்து நான்கைந்து நாட்களில் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என்றும், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை கடைப்பிடித்து வருவதாகவும் அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார்.

மேலும், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்றால், வேறு வழியில்லை, அவர்களுடன் நேரடிப் போருக்கு தயாராவதே எங்களுக்கு இருக்கும் ஒரே வழி என்று எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு பாகிஸ்தானைத் தாக்கும் தலிபான் போராளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இஸ்லாமாபாத் கோரியதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் மோதல்கள் வெடித்தன.
டசின் கணக்கானவர்கள்
பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இரு தரப்பினரும் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர், டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

மட்டுமின்றி முக்கிய கடவைகளை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பாகிஸ்தான் படைகளை குறிவைக்கும் தீவிரவாதிகளுக்கு காபூல் அடைக்கலம் அளிப்பதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியது.
தலிபான்கள் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதுடன், பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகள் ஆப்கானிய இறையாண்மையை மீறுவதாக புகார் அளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |