Super Mushak உட்பட... 4 பில்லியன் மதிப்பு இராணுவ உபகரணங்களை விற்கும் பாகிஸ்தான்
லிபியா நாட்டிற்கு 4 பில்லியன் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
ஆயுத விற்பனை
வட ஆப்பிரிக்க நாடான லிபியா மீது ஐ.நாவின் ஆயுதத் தடை உள்ளது. 
இந்த நிலையில், பாகிஸ்தான் மிகப்பெரிய ஆயுத விற்பனை ஒப்பந்தங்களில் ஒன்றாக, லிபிய தேசிய இராணுவத்திற்கு இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
அதன்படி, 4 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் விமானங்கள்
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு வெளியாகியுள்ள தகவல்களின்படி,
பாகிஸ்தான் மற்றும் சீனாவால் கூட்டாக உருவாக்கப்பட்ட பல்துறை போர் விமானமான 16 JF-17 போர் விமானங்கள் மற்றும் அடிப்படை விமானி பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் 12 Super Mushak பயிற்சி விமானங்கள் இதில் அடங்கும். 
பாதுகாப்பு விவகாரங்களில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் காரணமாக தங்களின் அடையாளத்தை வெளியிட மறுத்துவிட்டனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |