இந்தியாவை ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தும்! தேர்வாளர் நம்பிக்கை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வாளர் ஆகிப் ஜாவேத், ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான்
2022ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான், செப்டம்பர் 14ஆம் திகதி மீண்டும் ஆசியக் கிண்ணப் போட்டியில் எதிர்கொள்கிறது.
இந்த இரு அணிகள் மோதிய 13 டி20 போட்டிகளில் இந்திய அணி 9 வெற்றிகளையும், பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது.
ஆகிப் ஜாவேத்
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி தேர்வாளர் ஆகிப் ஜாவேத் (Aaqib Javed) இந்திய அணியை மீண்டும் வீழ்த்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பாகிஸ்தானின் டி20 அணி இந்தியாவை வெல்ல முடியும். இந்தியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் மிகப்பெரியவை.
தற்போதைய 17 கொண்ட பாகிஸ்தான் அணியால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். நாம் அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கக்கூடாது.
ஆனால் இந்த அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |