டி20 தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்! தொடர்ந்து அடி வாங்கும் மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
ஃபர்ஹான் அதிரடி
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 புளோரிடாவில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 189 ஓட்டங்கள் குவித்தது. ஃபர்ஹான், சைம் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் குவித்தது.
ருத்ர தாண்டவமாடிய ஃபர்ஹான் 53 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
அரைசதம் அடித்த அயூப் 49 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அலிக் அதனசி அரைசதம்
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
முதல் அரைசதத்தை பதிவு செய்த அலிக் அதனசி 60 (40) ஓட்டங்களும், ரூதர்போர்டு 51 (35) ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
ஃபர்ஹான் ஆட்டநாயகன் விருதும், முகமது நவாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |