அவுஸ்திரேலியாவிற்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான்! தொடரைக் கைப்பற்றி மிரட்டல்
லாகூரில் நடந்த அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வென்று, பாகிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது.
சல்மான் அஹா, உஸ்மான் கான் விளாசல்
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி லாகூரில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் சல்மான் அஹா (Salman Agha) 40 பந்துகளில் 76 ஓட்டங்கள் விளாசினார். உஸ்மான் கான் 36 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் வெற்றி
அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 35 (20) ஓட்டங்களும், மேத்யூ ஷார்ட் 27 (23) ஓட்டங்களும் விளாசினர்.
அபாரமாக பந்துவீசிய அப்ரார் அகமது, ஷதாப் கான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டுகளும், சைம் மற்றும் முகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 2018ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்றுள்ளது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |