மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மணமகள் ஒருவர் இந்திய பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்று எழுதி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
மோடியிடம் பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்
பாகிஸ்தானின் காராச்சியைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் என்ற இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவர் டெல்லியில் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி, இந்திய பிரதமர் மோடிக்கு தனது உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் உருக்கமாக வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்திய பிரதமர் மோடி இதில் நேரடியாக தலையீட்டு நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் இருநாட்டு ஊடகங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட அமைப்புகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கசந்த மணவாழ்க்கை
நீண்ட கால விசா வசதியுடன் இந்தூரில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த விக்ரம் நாக்தேவ் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி நகிதாவை கராச்சியில் இந்து திருமண முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவரும் இந்தியா வந்த நிலையில், விரைவிலேயே அவர்களிடையே மண வாழ்க்கையானது கசக்க தொடங்கியுள்ளது.
2020 ஜூலை 9ம் திகதி, தன்னுடைய விசாவில் தொழில்நுட்ப காரணங்களால் சிக்கல் இருப்பதாக கூறி, அவரை பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறு அத்தாரி எல்லையில் தனியாக விட்டு விட்டு கணவர் விக்ரம் நாக்தேவ் சென்று விட்டதாக நகிதா தெரிவித்துள்ளார்.

அன்றிலிருந்து தன்னை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு எந்தவொரு முயற்சியையும் கணவர் விக்ரம் எடுக்கவில்லை என்றும், என்னை இந்தியாவுக்கு அழைத்து கொள்ளுமாறு கெஞ்சியும் ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாக வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இரண்டாவது திருமணம்
பாகிஸ்தான் திரும்பிய பிறகு விக்ரம் இன்னொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக அறிந்த நகிதா, இந்திய பிரதமர் மோடியிடம் நீதி பெற்று தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையில் 2025 ஜனவரி 27ம் திகதி எழுத்துப்பூர்வ புகார் ஒன்றையும் கணவர் மீது நகிதா அளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |