தடுமாறிய சமரி அதப்பத்து: இலங்கை மகளிர் அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தடுமாறிய அணித்தலைவர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களே எடுத்தது. அதிரடியாக ஆட தடுமாறிய அணித்தலைவர் சமரி அதப்பத்து 33 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
மோமினா ரியாசாத் 2 விக்கெட்டுகளும், உம்-எ-ஹானி, நஷ்ரா சந்து, துபா ஹஸன் மற்றும் ஆயிஷா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆறுதல் வெற்றி
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 115 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஆயிஷா ஜாபர் 39 (31) ஓட்டங்களும், ஷாவால் 21 (12) ஓட்டங்களும், முனீபா அலி 19 (16) ஓட்டங்களும் எடுத்தனர்.
சமரி அதப்பத்து, கவிஷா தில்ஹரி தலா 2 விக்கெட்டுகளும், நிமஷா மீபேக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |