இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வந்தது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 312 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணி 461 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை 279 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 82 ஓட்டங்கள் குவித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அபரர் அகமது, நோமன் அலி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து 131 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், பாபர் ஆசம் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ஷாகீல் 30 ஓட்டங்களில் வெளியேறினார்.
இமாம்-உல்-ஹாக் 50 ஓட்டங்களை கடந்து நிலைத்து நின்று ஆட 6 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்.
இவ்விரு அணிகளுக்கான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் 24ம் திகதி தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |