லண்டனில் புதிய கிளையை திறந்துள்ள பிரபல பாகிஸ்தான் சாய்வாலா: முழு விவரம்
பிரபலமான பாகிஸ்தான் டீக்கடை உரிமையாளர் அர்ஷத் கான் தன்னுடைய புதிய தொழில் கிளையை லண்டனில் திறந்துள்ளார்.
பிரபலமான பாகிஸ்தான் சாய்வாலா
நீலக் கண்களை கொண்ட அர்ஷத் கான் என்ற பாகிஸ்தான் சாய்வாலா-வை கடந்த 2016ம் ஆண்டு புகைப்பட கலைஞர் ஜியா அலி என்பவர் புகைப்படம் எடுத்ததை தொடர்ந்து இவர் இணையத்தில் பலரை ஈர்த்தார்.
அதன் பின்பு தான் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
இணையத்தை கலக்கிய புகைப்படம் மூலம் அர்ஷத் கானுக்கு மாடலிங் மற்றும் திரைப்படங்களில் நடிக்க பல்வேறு வாய்ப்புகள் குவிந்தது, அவரும் பொழுதுபோக்கு துறையில் தனது காலடியை பதித்தார்.
இருப்பினும் 2020ம் ஆண்டு தன்னுடைய வேரான டீக்கடை தொழிலுக்கே மீண்டும் திரும்பினார்.
பல்கி பெருகிய தொழில்
இந்நிலையில் 2020ம் ஆண்டு இஸ்லாமாபாத்-தில் அர்ஷத் கான் தனக்கு சொந்தமான டீக்கடை(சாய் கஃபே) ஒன்றை தொடங்கினார்.
இந்த கடைக்கு மக்கள் வழங்கிய நல்ல வரவேற்பை தொடர்ந்து தன்னுடைய தொழில் கிளைகளை லாகூர் மற்றும் முர்ரியில் என மூன்று இடங்களுக்கு விரிவுபடுத்தினார்.
இந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானின் புகழ்பெற்ற சாய்வாலா அர்ஷத் கான் தன்னுடைய சாய் கஃபே கிளையை கிழக்கு லண்டனின் இல்ஃபோர்ட் லேன்( Ilford Lane) பகுதியில் திறந்துள்ளார்.
பெருமகிழ்ச்சியில் அர்ஷத் கான்
தன்னுடைய புதிய சாய் கஃபே கிளையை லண்டனில் திறந்து இருப்பது குறித்து மகிழ்ச்சியுடன் அர்ஷத் கான் பேசிய போது, லண்டனில் உள்ள என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு அங்கு வந்து தேநீர் பரிமாறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
லண்டனில் சாயா-விற்கான தேவை எங்களை ஊக்கப்படுத்துகிறது, அந்த வகையில் இல்ஃபோர்ட்டில் திறந்துள்ள சாய் கஃபே-வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இல்ஃபோர்ட் லேன் பகுதியில் கணிசமான இந்தியர்களும், பாகிஸ்தான் மக்களும் இருப்பதால் இப்பகுதியை துரானி சகோதர்களுடன் இணைந்து தேர்வு செய்தோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |