திருமண பரிசாக கழுதைக்குட்டி! மணமகளை வியப்பில் ஆழ்த்திய மணமகன்: காரணம் தெரியுமா?
பாகிஸ்தானில் மணமகன் ஒருவர், மணமகளான தனது மனைவிக்கு கழுதை ஒன்றை கல்யாண பரிசாக வழங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்யாண பரிசாக கழுதை
காதல் திருமணமோ அல்லது வீட்டில் பெரியவர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமோ, தற்போது திருமணங்கள் எப்படி இருந்தாலும் சரி, கல்யாண நாள் அன்று மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பிரமிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர்.
சிலர் தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வது மூலமாகவோ, அல்லது தங்களது தனித்தன்மையான திறமைகளை தங்கள் ஜோடிக்கு திருமண மேடையில் சமர்ப்பிப்பது மூலமாகவோ காதலை வெளிப்படுத்துகின்றனர்.
சிலர் தங்களுடைய காதல் ஜோடியை பிரமிக்க வைக்கும் பரிசு பொருட்களை கொடுத்து காதலை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தானில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகன் ஒருவர், மணமகளான தனது மனைவிக்கு கழுதை ஒன்றை கல்யாண பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மேலும் அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் மிகவும் எளிமையானதாகவும், இதயப்பூர்வமானதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கழுதை பரிசு ஏன்?
திருமண நாளில் மனைவிக்கு கழுதையை ஏன் பரிசாக வழங்கினேன் என்றால், “எனது மனைவிக்கு கழுதை என்றால் மிகவும் பிடிக்கும், அத்துடன் கழுதைகள் அன்பானது மற்றும் கடினமாக உழைக்க கூடியது, கழுதைகளை எனக்கும் பிடிக்கும்" என்பதால் வழங்கினேன் என மணமகன் காரணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் யூடியூபர் அஸ்லான் ஷா இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ 2 லட்சம் லைக்குகள் கடந்து பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த பதிவில் கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், "இது ஒரு குறியீட்டு பரிசு, அதைப் புரிந்து கொள்வதற்கு நிறைய அறிவு தேவை." என தெரிவித்துள்ளார்.