சுவிட்சர்லாந்து நாட்டுக் கொடியை எரித்த பாகிஸ்தான் நாட்டவர்கள்: வைரல் வீடியோ
பாகிஸ்தான் நாட்டு மதகுருமார்கள் சிலர் சுவிட்சர்லாந்து நாட்டுக் கொடியை தீவைத்து எரிக்கும் காட்சி ஒன்று வைரலாகியுள்ளது.
குரானை தீவைத்து எரித்த நபர்
கடந்த சனிக்கிழமை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், Rasmus Paludan என்பவர், துருக்கி தூதரகத்தின் அருகே குரானை தீவைத்து எரித்தார்.
இந்த Rasmus Paludan டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளின் இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.
In Pakistan, they are burning Switzerland’s flag confusing it with Sweden’s flag to protest against Paludan’s Quran burning in front of Turkish embassy in Stockholm. pic.twitter.com/jB7OHkZTfn
— Ashok Swain (@ashoswai) January 26, 2023
வைரலானதற்குக் காரணம்
ஸ்வீடன் நாட்டவர் ஒருவர் குரானை தீவைத்து எரித்ததால், ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தானியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
போராட்டங்களின் ஒரு பகுதியாக மத குருமார்கள் சிலர் சுவிட்சர்லாந்துக் கொடியை தீவைத்து எரித்துள்ளனர்.
அதாவது, சுவிட்சர்லாந்துக் கொடியை ஸ்வீடன் நாட்டுக் கொடி என்று நினைத்து தவறுதலாக அவர்கள் தீவைத்து எரித்துள்ளனர்.
ஆகவே, அவர்கள் சுவிஸ் கொடியை தீவைத்து எரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.