வெளிநாடுகளில் திட்டமிட்டு பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள்: கடும் கட்டுப்பாடு விதித்த வளைகுடா நாடுகள்
திட்டமிடப்பட்ட பிச்சை எடுக்கும் செயல்கள் காரணமாக பாகிஸ்தானியர்களுக்கு வளைகுடா நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பாகிஸ்தானியர்கள் மீது கடும் கட்டுப்பாடுகள்
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகள் பாகிஸ்தானியர்கள் மீது கடுமையான விசா மற்றும் பாதுகாப்பு சோதனைகளை அதிகரித்துள்ளன.
இதற்கு வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்கள் மேற்கொள்ளும் திட்டமிட்ட பிச்சை எடுக்கும் குற்றச் செயல்களே(organized crime) முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் சேர்ந்த இந்த சட்டவிரோத கும்பல்களின் செயல்களால் பாகிஸ்தான் நாட்டிற்கான நற்பெயர் சர்வதேச அளவில் களங்கம் ஏற்பட்டு வருவதாக பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகளே கவலை தெரிவித்து வருகின்றனர்.
2025ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, பிச்சை எடுப்பதற்காக வெளிநாடு செல்லும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளது.
பிச்சை எடுத்தல் மற்றும் உம்ரா விசா முறைகேடு(புனித பயணத்திற்கான விசா) மூலம் சவுதி அரேபியாவிற்குள் நுழைந்த சுமார் 24,000 பேர் 2025ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதைப்போல ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 6000 பேரும், அஜர்பைஜான் நாட்டில் இருந்து சுமார் 2500 பாகிஸ்தானியர்களும் சட்டவிரோத பிச்சை எடுத்தல் குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகள் மட்டுமின்றி ஆப்பிரிக்கா, தாய்லாந்து, ஐரோப்பா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தியும் பிற நாடுகளுக்குள் பிச்சை எடுக்கும் கும்பல் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தடுப்பு நடவடிக்கை
இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுக்க பாகிஸ்தான் மத்திய புலனாய்வு முகமை(FIA) சர்வதேச விமான நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.
2025ம் ஆண்டில் மட்டும் இதுவரை 66,154 பயணிகள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுடன் செயல்படும் சட்ட விரோத கும்பலை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |