பிரம்மோஸை வீழ்த்த பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியுள்ள ஏவுகணை., இந்தியாவிற்கு புதிய சவால்
பாகிஸ்தான் தனது புதிய அதிவேக க்ரூஸ் ஏவுகணையான Fatah-3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பாகிஸ்தானின் Fatah ஏவுகணை குடும்பத்தில் புதிய மற்றும் சக்திவாய்ந்த உறுப்பினராக கருதப்படுகிறது.
இந்த ஏவுகணை இந்தியா-ரஷ்யா இணைந்து உருவாக்கிய BrahMos ஏவுகணைக்கு நேரடி பதிலாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Fatah-3, சீனாவின் HD-1 ஏவுகணையின் பாகிஸ்தான் பதிப்பாகும். இது ரோடு-மொபைல் (Road-Mobile) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டதால், லொறியில் பொருத்தி எளிதில் இடம் மாற்றி பயன்படுத்த முடியும்.

மேலும், Twin-Canister TEL அமைப்பின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு ஏவுகணைகளை ஏவ முடியும்.
இந்த ஏவுகணை மனைக்கு 3704 முதல் 4939 கி.மீ வேகத்தில் பறக்கிறது. அதாவது, ஒலியின் வேகத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு வேகமாக இயங்குகிறது.
இதன் வரம்பு (range) 290 முதல் 450 கி.மீ வரை உள்ளது. 240 முதல் 400 கிலோ கிராம் வரை வெடிகுண்டுகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
Fatah-3 கடல் மேற்பரப்பிற்கு மிக அருகில் பறந்து இலக்கை அடைவதால், எதிரியின் ரேடாரால் கண்டறிவது கடினமாகிறது. இது நிலத்திலும், கடலிலும் துல்லியமான தாக்குதல்களை நடத்தும் திறன் பெற்றுள்ளது.
இந்த எவேவுகணையை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஏவுகணை போட்டியை மேலும் தீவிரப்படுத்துகிறது. குறிப்பாக, இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் நிலப்பரப்பில் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைக்கும் திறன் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |