13 வயது சிறுவன் நடத்திய பயங்கரவாத தாக்குதல்! தந்தை, மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்
இஸ்ரேலில் தந்தை - மகன் மீது 13 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத தாக்குதலால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 13 வயது சிறுவன் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
@AFP
தந்தை-மகன் படுகாயம்
குறித்த சிறுவன் பாலஸ்தீனியத்தைச் சேர்ந்தவன் என்றும், அவனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் 47 வயது நபர் மற்றும் அவரது 23 மகன் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று நடந்த ஜெப ஆலயத் தாக்குதல் தொடர்பாக 42 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@Ammar Awad/Reuters
@AP
@AP

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.