இயேசு பிறந்த பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை
இயேசு பிறந்த பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்லகேமில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தை கைவிட்டனர்.
பாலஸ்தீனம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்த நிலையில், "இனப்படுகொலையை இப்போதே நிறுத்துங்கள்" என்று பெத்லகேம் பாதிரியார் முன்தர் ஐசக் கூறினார்.
"இன்று இயேசு பிறந்திருந்தால், அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார்" என்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேமில் உள்ள தனது தேவாலயத்தில் இருந்து பாதிரியார் முன்தர் ஐசக் தனது சபையில் கூறினார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 166 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 384 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Infosys நிறுவனத்திற்கு பெரும் அடி., புத்தாண்டுக்கு முன் வந்த மோசமான செய்தி, பங்குகளில் நேரடி தாக்கம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Bethlehem church cancel Christmas celebrations, Palestine Churches cancel Christmas celebrations, Palestine, Israel, Hamas