காசாவில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஆயுத குழு இடையே மோதல்: 5 பேர் உயிரிழப்பு
காசாவில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன குழுக்களுக்கு இடையே உள்நாட்டு மோதல் வெடித்து இருப்பது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் ஹமாஸ் பாதுகாப்பு படைக்கும், பாலஸ்தீனத்தின் அல்-முஜைடா குலத்தை சேர்ந்த ஆயுத குழுவுக்கும் இடையே இன்று பலத்த சண்டை வெடித்துள்ளது.
இஸ்ரேலிய படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பாலஸ்தீன அல் முஜைடா குழுவை கைது செய்யவே அவர்களது பகுதிக்குள் நுழைந்ததாக ஹமாஸ் தகவல் தெரிவித்துள்ளது.
ஆரம்பக் கட்ட தகவல்கள் படி, ஹமாஸ் படையினர் துப்பாக்கிகள் மற்றும் லாஞ்சர் வாகனங்களுடன் அல் முஜைடா குழுவின் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அல் முஜைடா குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி தரும் விதமாக அல் முஜைடா குழுக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் குவிந்ததில் இரண்டு கும்பலுக்கும் இடையிலான மோதல் தீவிரமாக வெடித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |