பாலஸ்தீன இஸ்லாமிய பகுதிகளுக்குள் புகுந்த இஸ்ரேலியர்கள்: கொடி அணிவகுப்பில் பதற்றம்!
கிழக்கு ஜெருசலேமில் உள்ள பழைய நகரின் முஸ்லிம் பகுதிகளுக்குள் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் புகுந்து அணிவகுப்பு நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்துள்ளது.
1967-லில் போரில் கிழக்கு ஜெருசலேமிலை இஸ்ரேல் கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் பழைய நகரத்தில் நடத்தப்பட்ட கொடி அணிவகுப்பில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான தீவிர வலதுசாரி இஸ்ரேலியர்கள் டமாஸ்கஸ் கேட் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் நடத்தப்பட்ட இந்த கொடி அணிவகுப்பின் போது ”அரேபியர்களுக்கு மரணம்” போன்ற இனவாத முழக்கங்களையும் இஸ்ரேலிய தீவிர தேசியவாத குழுக்கள் எழுப்பினர்.
קדימון למחר: קבוצת יהודים עם דגלים עוברת ברובע המוסלמי ברחוב הגיא. אחד מהם יורק על מקבצת נדבות מוכרת מהעיר העתיקה.
— סולימאן מסוודה سليمان مسودة (@SuleimanMas1) May 28, 2022
pic.twitter.com/bOCA5Qy6Zo
Reuters
மேலும் யூத தேசியவாதிகளின் பிளவுபட்ட குழு ஒன்று அல்-அக்ஸா மசூதிக்குள் புகுந்து இஸ்ரேலிய தேசிய கொடியை அசைக்க தொடங்கினர், அத்துடன் 1967ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி மசூதி வளாகத்தில் சில யூத வழிபாட்டாளர்கள் பிராத்தனை செய்தனர்.
இஸ்ரேலியர்களின் இந்த அத்துமீறலை எதிர்த்து பாலஸ்தீனியர்களுக்கும் ஆயுதமேந்திய இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலில் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் காயமடைந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
AP
கூடுதல் செய்திகளுக்கு: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சி...கின்னஸ் உலக சாதனை பட்டியலில் ஐபிஎல்!
இந்தநிலையில், இஸ்ரேல் நெருப்புடன் விளையாடுகிறது என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரித்துள்ளார்.
BBC