பதவி விலகிய பாலஸ்தீன பிரதமர்., ராஜினாமா கடிதத்தில் கூறியது என்ன?
காஸா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டயே (Mohammad Shtayyeh) யாரும் எதிர்பாராத முடியை எடுத்துள்ளார்.
காஸா, மேற்குக் கரை, ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக பாலஸ்தீன பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டம்., கோடீஸ்வர விருந்தினர்கள் எங்கு தங்கவைக்கப்படவுள்ளனர் தெரியுமா?
இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், காஸாவில் இஸ்ரேலின் தொடர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டயே இன்று பதவி விலகினார்.
முகமது ஷ்டய்யா தனது ராஜினாமா கடிதத்தை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் (Mahmud Abbas) ஒப்படைத்துள்ளார்.
சவால்களை முறியடித்து சிறந்த முடிவுகளை எடுக்கக் கூடிய புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் படைகள் போர் தொடுத்திருப்பது தெரிந்ததே.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரின் பின்னணியில், பாலஸ்தீனம் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்தப் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்க அமெரிக்காவும் பரிந்துரைத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Palestine Prime Minister, Gaza, Israel Hamas War