இஸ்ரேலிய பகுதியாக காசா மற்றும் மேற்குக் கரை: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்
காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலிய பகுதியாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய வரைபடம்
அண்மையில் மத்திய கிழக்கு வரைபடம் ஒன்றை அமெரிக்காவின் மத்திய கட்டளைக் குழு வெளியிட்டு இருந்தது.
அதில், பாலஸ்தீனத்தின் காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதிகள் இஸ்ரேலின் ஒருப்பகுதியாக காட்டப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்ட் காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
This is the plan which Arab kingdoms back huh. Centcom removes Palestine and give it all to Israel. pic.twitter.com/LWwgGe5vxr
— Ali (@MerruX) August 15, 2026
இந்த சுற்றுப்பயணத்தின் போது தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய குடிமை மற்றும் ராணுவத் தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதில், பஹ்ரைன், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் சுற்றுப்பயணத்தின் போது இந்த நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களுடன் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் உரையாடினார்.
மத்திய கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |