ஜேர்மன் சுற்றுலாப்பயணிக்கு மரண பயத்தைக் காட்டிய பாலஸ்தீனியர்கள்: கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள சம்பவம்

Germany
By Balamanuvelan Mar 20, 2023 10:09 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

பாலஸ்தீனத்துக்கு சுற்றுலா சென்றிருந்த இரண்டு ஜேர்மானியர்களின் கார், பாலஸ்தீன நாட்டவர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளானது. அந்த தாக்குதல் தங்களுக்கு மரண பயத்தைக் காட்டியதாக தெரிவிக்கிறார் இந்த விரும்பத்தகாத நிகழ்வை சந்தித்தவர்களில் ஒருவரான Gerald Hetzel.

மரண பயத்தைக் காட்டிய தாக்குதல்

ஜேர்மன் நாட்டவர்கள் இருவர் பாலஸ்தீனத்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், திடீரென நடுரோட்டில் பாலஸ்தீன நாட்டவர்கள் அவர்களுடைய காரை சுற்றிவளைத்துக்கொண்டு தாக்கத்துவங்கியுள்ளனர்.

ஜேர்மன் சுற்றுலாப்பயணிக்கு மரண பயத்தைக் காட்டிய பாலஸ்தீனியர்கள்: கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் | Palestinians Scared To Death Of German Tourist

(Screenshot: Channel 12; Used in accordance with Clause 27a of the Copyright Law)

பெரிய பெரிய கற்களைக் கொண்டு அவர்கள் காரைத் தாக்கியதுடன், சிலர் கத்தியையும் உருவ, நடுநடுங்கிப்போய், நாங்கள் சுற்றுலாப்பயணிகள் என அந்த சுற்றுலாப்பயணிகள் இருவரும் ஆங்கிலத்தில் சத்தமிட்டும், பொலிசாரால் கூட அந்த நபர்கள் தாக்குவதைத் தடுக்கமுடியவில்லையாம்.

தாக்குதலுக்கான காரணம் என்ன?

அதாவது, அந்த இரண்டு ஜேர்மானியர்களும் வாடகை கார் ஒன்றில் சென்றிருக்கிறார்கள். அந்தக் காரின் நம்பர் பிளேட் இஸ்ரேல் நாட்டின் நம்பர் பிளேட் என்பதுதான் பிரச்சினை.

ஆக, அவர்களை இஸ்ரேலியர்கள் என எண்ணிக்கொண்டு அந்த பாலஸ்தீனிய நாட்டவர்கள் தாக்கத்துவங்கியுள்ளனர்.

பொலிசாரால் அவர்களைக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்று கூறும் Gerald, அரேபிய இஸ்ரேலியரான ஒருவர்தான் தங்களைக் காப்பாற்றியதாக தெரிவிக்கிறார்.

ஜேர்மன் சுற்றுலாப்பயணிக்கு மரண பயத்தைக் காட்டிய பாலஸ்தீனியர்கள்: கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் | Palestinians Scared To Death Of German Tourist

Nasser Ishtayeh/Flash90

தங்கள் கார் கடுமையாக சேதமடைந்ததால் தங்களை அந்த அரேபிய இஸ்ரேலியர் தனது காரில் ஏற்றிக்கொண்டு சின்னச் சின்னத் தெருக்கள் வழியாக தங்களை அழைத்துக்கொண்டுவந்து நகரத்துக்கு வெளியே விட்டதாகத் தெரிவிக்கிறார்.

இந்த சம்பவம், இஸ்ரேலைக் குறித்த தனது எண்ணங்களை மாற்றவில்லை என்று கூறும் Gerald, இஸ்ரேல் நட்பு குணம் கொண்ட ஒரு நாடு என்கிறார்.

ஆனால், பாலஸ்தீனத்தைக் குறித்த தனது எண்ணம் மாறியுள்ளதாக தெரிவிக்கும் Gerald, சில பாலஸ்தீன இளைஞர்களை சந்தித்தோம், அவர்கள், யூதர் ஒருவரைக் கண்டால் அவரைக் கொல்ல விரும்புவதாக கூறுகிறார்கள், இது அவர்களுடைய கல்வி அமைப்பிலேயே உள்ள பிரச்சினை, அவர்கள் கடும் வெறுப்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள் என்கிறார்.

ஜேர்மனி கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேலுக்கான ஜேர்மன் தூதர் Steffen Seibert, சுற்றுலாப்பயணிகளை அவர்களுடைய நம்பர் பிளேட் பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு கூட்டம் தாக்குவதெல்லாம் மோசமானதும் கோழைத்தனமானதும் ஆகும் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவர்களை இஸ்ரேல் பொலிசார் என்றும், அவர்கள் மாறுவேடத்தில் வந்திருப்பதாக எண்ணியும்தான் அந்தக் கூட்டம் தாக்கியதாக பாலஸ்தீனிய பாதுகாப்பு படையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US